'அமைதி தீவில்' தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

Island of peace

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் இந்தியாவின் ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் பூன்ச் மாவட்டத்துக்கும் இடையில் இருக்கிறது வர்த்தக வசதி மையமான 'அமைதி தீவு' (Island of Peace).

இரு நாட்டு எல்லைகளில் வர்த்தக உறவுக்கு மையமாக செயல்பட்டு வந்த அமைதி தீவின் மீது, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

'இந்திய-பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டப் பிறகு முதன்முறையாக அமைதி தீவின் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலால், யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை.' என்று இந்திய ராணுவத் தரப்பு கூறியுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஞாயிற்றுக் கிழமை வர்த்தக மையத்துக்கு விடுமுறை என்பதால், வேலை பார்ப்பவர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!