வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (13/03/2017)

கடைசி தொடர்பு:09:23 (14/03/2017)

The Viral Fever நிறுவனர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Arunabh kumar

'த வைரல் ஃபீவர்' (The Viral Fever) என்ற யூ-டியூப் சேனல், இந்திய அளவில் ட்ரெண்டிங்கான வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அருணாப் குமார் என்பவரால் இந்த யூ-ட்யூப் சேனல் தொடங்கப்பட்டது. இவர், மேற்கு வங்கம் கராக்பூரில் உள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர். 

நேற்று, ஒரு ப்ளாகில், அருணாப் குமார் அவரின் சொந்த ஊரான முசார்ஃபர்பூரில் இருந்து வந்து, அவரது நிறுவனத்தில் வேலைசெய்து வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல்ரீதியாக எப்படித் தொந்தரவுகொடுத்தார் என்று விவரித்திருந்தது. இதையடுத்து, இந்த ப்ளாகில் வந்த தகவல் வைரலானது.

இந்நிலையில், 26 வயதாகும் ரேஷ்மா சென்குப்தா என்ற பெண் இயக்குநர் ஒருவர், இன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், அருணாப் குமார் தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

 ரேஷ்மா பத்ரா என்ற பெண்ணும் 2012-ம் ஆண்டு, அருணாப் தனக்கும் பாலியல் தொல்லைகள்கொடுத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இரண்டு பெண்கள், ஒரே நாளில் இந்தியாவின் பிரபல யூ-டியூப் நிறுவனர் மீது புகார் அளித்துள்ளது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி 'த வைரல் ஃபீவர்', 'ப்ளாகில் வெளியிடப்பட்ட விஷயம் முற்றிலும் தவறானது. எங்கள் மீதும் எங்கள் குழுவின் மீதும் அவதூறு பரப்பும் வகையில் அது இருக்கிறது. அனைத்து குற்றச்சாட்டுகளும், ஆதாரமே இல்லாத பொய்கள்.' என்று விளக்கம் அளித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க