காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் சசி தரூர்! வைரலாகும் ஆன்லைன் மனு

Sashi tharoor

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத் தேர்தலில் முன்னின்று பிரசாரம் மேற்கொண்டார். ஆனாலும், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக திருவனந்தபுரம் எம்பி, சசி தரூர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற ஆன்லைன் மனு ஒன்று வைரலாகி வருகிறது.

"இன்னும் இரண்டு ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பொது விஷயங்களில் நாட்டமுள்ள, பிரதமராவதற்குத் தகுதியுள்ள தலைவரால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி முக்கியம். அப்படிப்பட்ட ஒரு தலைவர், சசி தரூர். அவரை நாங்கள், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம். ஐ.நா-வுக்குக் கீழ் அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவர். இரண்டு முறை திருவனந்தபுரத்தில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல புத்தகங்களின் ஆசிரியர். பன்மொழி வித்தகர். 2014-ம் ஆண்டு மோடி அலையில் பலர் தோல்வியடைந்தபோதும் அவர் வெற்றி பெற்றார்' என்று பற்பல காரணங்களை அடுக்கி, மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு  அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!