வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (14/03/2017)

கடைசி தொடர்பு:14:52 (14/03/2017)

’அரசியல்ல இதெல்லாம் சகஜம்’ : ராகுல் கூலான பதில்!

Rahul Gandhi

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்குறித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த ராகுல், ’ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ.க இரண்டு இடங்களையும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி அந்த இரண்டு இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றதற்கு பணபலத்தைப் பயன்படுத்தியதே காரணம். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிறிய சறுக்கல். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றார் நிதானமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க