பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரஜாபதி கைது

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள,  உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Gayathri Prajapathi
 

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பிரஜாபதி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தலைமறைவாக இருந்தார். 2014 ஆம் ஆண்டு பிரஜாபதி ஆறு பேருடன் சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்தப் பெண்ணின் மைனர் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

நீண்ட நாள் தலைமறைவாக இருந்த பிரஜாபதியை உ.பி. காவல் துறை சிறப்புப் படைகள் அமைத்துத் தேடி வந்தது. மேலும் அவரின் மகன்களிடம் தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று காலை பிரஜாபதியை லக்னோவில் சுற்றி வளைத்து உ.பி. போலீஸ் கைது செய்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!