வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (15/03/2017)

கடைசி தொடர்பு:11:55 (15/03/2017)

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் ஆய்வு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் யுகியா அமனோ வந்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலைகளில் தற்போது மின்உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. கூடங்குளத்தின் அணுமின் நிலையம் குறித்து அணுசக்தி முகமையின் தலைவர் யுகியா அமேனோவும் அவரது குழுவினரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை இன்று ஆய்வு செய்யவுள்ளனர்.

அதன்பின்னர் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகளுடன், அணுஉலையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.