வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:55 (17/03/2017)

டெல்லியில் சுஷ்மாவுடன் ஜெயக்குமார் சந்திப்பு!

இந்திய மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதா கிருஷ்ணன் ஆகியோர் மீனவ போராட்டக்குழுவினரைச் சந்தித்துப் பேசினர். அப்போது, மீனவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். இதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

Jayakumar meets Sushma Swaraj

இந்நிலையில், டெல்லியில் மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழக மீன்வளத்துறை மற்றும் நிதி அமைச்சரான ஜெயக்குமார் சந்தித்துள்ளார். அப்போது, மீனவர்களின் பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, மீனவர்கள் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க அவர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பின்போது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் இருந்தார்.