Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரகண்ட் முதல்வராகிறார் திரிவேந்திர சிங்

உத்தரகண்ட் முதல்வராக, திரிவேந்திர சிங் ராவத் நாளை பதவியேற்க உள்ளார்.

Trivendra Singh Rawat

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கோவா, மணிப்பூரில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கோவா மற்றும் மணிப்பூரில் பிறக்கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது.  முக்கியமாக, உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்நிலையில், அங்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் திரிவேந்திர சிங் ராவத் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, அம்மாநில பா.ஜ.க.வினர் ஆளுநரை, சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமைக் கோரினார். இதைத்தொடர்ந்து  ஆட்சியமைக்க, அவர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில், திரிவேந்திர சிங் நாளை உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close