எதற்கு அருண் ஜெட்லியை சந்தித்தார் ஜெயக்குமார்?

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார்.

Jayakumar meets Arun jaitley

தமிழக மீன்வளத்துறை மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை, அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். அப்போது தமிழக மீனவர் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஜெயக்குமார், மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரான அருண்ஜெட்லியை சந்தித்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து அளிப்பது குறித்து  தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

சந்திப்புக்குப் பின் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "வர்தா புயல் பாதிப்பை சீர்செய்ய ரூ.22,573 கோடியை ஒதுக்கவும், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணப் பணிக்காக ரூ.39,665 கோடி ஒதுக்கவும் அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தினேன். மேலும், நிலுவையிலுள்ள மத்தியஅரசு பங்குத் தொகை ரூ.5,145 கோடியை வழங்கவும் வலியுறுத்தியுள்ளேன். இதையடுத்து தமிழகத்துக்கான நிதியை வழங்குவோம் என்று ஜெட்லி உறுதியளித்துள்ளார்" என்றார்.

இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!