வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (17/03/2017)

கடைசி தொடர்பு:19:40 (17/03/2017)

ஐ.எஸ் சதி? - தாஜ்மஹாலுக்கு தீவிரப் பாதுகாப்பு

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளனர் என்று உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ்மஹால் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் ஷாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அளவில் காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

இதைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பேர் வருகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாஜ்மஹாலை தகர்க்க சதி செய்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் SWAT கமாண்டாக்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சில மணி நேரத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு சோதனை நடத்துகின்றனர். வெளிப்பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்குப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வாகன நிறுத்துமிடங்களிலும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. நேற்று மாலையில் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டும், காவல்துறை மோப்ப நாய்களைக் கொண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது.