Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும் ' - சித்தராமையா அதிரடி!

கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும் என, அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

Siddaramaiah

கர்நாடக மாநில அரசின், பொது நிர்வாகத்துறைச் செயலாளராக இருப்பவர், ஶ்ரீவத்ஸா கிருஷ்ணா. இவர், தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை, தனக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களை, ஆங்கிலத்தில்தான் அனுப்ப வேண்டும். கன்னட மொழியில் அனுப்பக்கூடாது என்று கூறியுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அந்த அதிகாரி செய்தது மிகவும் தவறு. அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

கர்நாடகாவில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் கட்டாயமாக கன்னடமொழி கற்க வேண்டும். கன்னடத்துக்கு எதிராக எந்த அதிகாரி செயல்பட்டாலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கன்னட வளர்ச்சி ஆணையத்துக்கு ( Kannada Development Authority) உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கன்னட வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement