வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (18/03/2017)

கடைசி தொடர்பு:16:41 (18/03/2017)

'இன்டர்நெட், இனி அடிப்படை உரிமை!'- கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

Kerala government

இந்தியாவில், முதன்முறையாக கேரள மாநில அரசு, இன்டர்நெட் வசதியை அடிப்படை உரிமையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் உணவு, நீர் மற்றும் கல்வி போல கேரளாவில் இனி இன்டர்நெட் வசதியும் அடிப்படை உரிமைப் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதற்காக, மாநில அரசு 20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானிய விலையிலும் இன்டர்நெட் வசதியைக் கொடுக்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளது.

கேரளாவின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், 'இந்தத் திட்டத்தின்மூலம் இன்டர்நெட் என்பது மக்களின் அடிப்படை உரிமையாக மாறுகிறது. இன்னும் 18 மாதங்களில், 'கே-போன் நெட்வொர்க்' நவீன தொழில்நுட்ப வசதிமூலம் 1,000 கோடி ரூபாய் செலவில் திட்டம் அமல்படுத்தப்படும். 2017-2018 ஆண்டுக்குள், அனைத்து அரசாங்கப் பரிமாற்றங்களும் ஆன்லைனில்தான் இருக்கும்' என்று கூறியுள்ளார்.   

 ஐக்கிய நாடுகள் சபை, இன்டர்நெட் வசதியை ஒவ்வொரு நாடும் அடிப்படை உரிமைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.