காதலிக்கு சாலையில் சர்ப்ரைஸ் ப்ரோபோஸல்... கடுகடுத்த கட்சிகள்!

மகாராஷ்டிராவில், கடந்த மார்ச் 11-ம் தேதி, தன் காதலிக்கு நடுரோட்டில்வைத்து சர்ப்ரைஸ் ப்ரோபோஸ் செய்துள்ளார், அவரது பாய் ஃப்ரெண்ட். அந்த பாய் ஃப்ரெண்ட், தன் காரில் இருந்து இறங்கி, ஒரு காலில் மண்டியிட்டு, தன் காதலியை வருங்கால மனைவியாக்க ப்ரோபோஸ் செய்தது என இவையெல்லாம் நடந்தது சில நொடிகள்தான். பின்னர், இருவரும் வாகனத்தில் ஏறி, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் அனைத்தையும் ஒருவர் வீடியோ எடுத்து, இன்டர்நெட்டில் பதிவேற்றியுள்ளார். இது, படு வைரலானது. இதனைப் பார்த்து கடுப்பான, சில உள்ளூர் மதவாதக் கட்சிகள்,  'அந்த ஜோடி செய்த செயலுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று கூறினர். இதையடுத்து, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாய்ஃப்ரெண்ட் இணையத்தின் வாயிலாகவே பொது மன்னிப்புக் கோரினார். இருந்தும் சில கட்சிகள், 'அவர்கள் ட்ராஃபிக் ஏற்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளோம்' என்று அறிவித்தன. இதனால், அந்தப் பெண் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

 

 

 

இந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தந்தை, 'அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என் மகளுக்கு தொடர்ந்து கொடுத்துவரும் தொந்தரவால், அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவர், தற்கொலை செய்துகொள்வேன் என்றுகூட கூறுகிறார். ஒரு சாதாரண தவறுக்கு, இப்படி எதிர்வினையாற்றுவது நல்லதல்ல' என்று வருத்தப்படுகிறார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஜோடிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, 'தேசிய லோகின்ந்த்' என்ற  கட்சி அறிவித்தது. பிறகு, அந்த அறிவிப்பைக் கைவிட்டது. தற்போது, அந்த ஜோடியின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால் உள்ளூர் போலீஸோ, 'சம்பவத்தில் ஈடுபட்ட ஜோடிக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறிய கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்' என்று கூறியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!