உத்தரகாண்ட் முதல்வராகப் பதவியேற்றார், திரிவேந்திர சிங் ராவத்!

Utthrakhand CM

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அந்த மாநிலத்தில், மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க 57 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், மற்ற கட்சிகள் இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றன.

தனிப் பெரும்பான்மையுடன் அரியணை ஏறும் பா.ஜ.க-வின் முதல்வராக, அக்கட்சியின் திரிவேந்திர சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் ராவத் இன்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். டேராடூனில் நடந்த விழாவில், ஆளுநர்  பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். புதிதாகப், பதவியேற்றுள்ள அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!