இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்துக்கு முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத் - நாளை பதவியேற்பு

Yogi Adityanath

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. யார் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவிக்காமலேயே உத்தரப் பிரதேசத்தில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றது பா.ஜ.க. இந்நிலையில், இன்று பா.ஜ.க-வின் உத்தரப் பிரதேச நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எம்.பி., யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். கேஷவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் ஷர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் நாளை உ.பி முதல்வராக பதவியேற்கிறார். மக்கள் தொகை கணக்கின்படி, உ.பிதான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். 

யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைக் கூறி பிரச்னைகளில் சிக்கும் வரலாறு கொண்டவர் யோகி ஆதித்யநாத். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!