வெளியிடப்பட்ட நேரம்: 21:07 (18/03/2017)

கடைசி தொடர்பு:10:15 (20/03/2017)

நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்!

aishwarya rai father

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார். இவர் ராணுவத்தில் பயாலஜிஸ்ட்டாக பணியாற்றியவர். மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஐ.சி.யூ.வில் இருந்தவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, ஜஸ்வர்யா ராய்தான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராயின் அம்மா விரிந்தா மற்றும் சகோதரர் ஆதித்யாவும் மருத்துவமனையில் உள்ளனர்.