‘தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு எடுபடாது’- ப.சிதம்பரம்

Chidambaram

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 'தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு எடுபடாது' என்று பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ப.சிதம்பரம், 'காங்கிரஸ் கட்சியின் நிறுவனக் கட்டமைப்பு பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்புக்கு ஈடாகாது. அவர்களால், ஓட்டுக்களை அதிகம் பெற முடிகிறது. ஆனால், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடனோ, தமிழகத்தில் அ.தி.மு.க-வுடனோ போட்டிபோட நினைத்தால், நிச்சயம் தோல்வியடையும்.' என்றார்.

அவர் மேலும், 'தேசிய அளவிலான தேர்தல் என்பது, 29 மாநிலங்களின் கூட்டுத் தேர்தல். எனவே, அந்த தேர்தல் ஒவ்வொரு மாநிலத்தையும் சார்ந்தது. பலர், உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் பணமதிப்பிழப்புக்கு ஆதரவாக மக்களின் நிலைப்பாடு என்கிறார்கள்.

அப்படியென்றால், பஞ்சாபில் மக்களின் நிலைப்பாடு பணமதிப்பிழப்புக்கு எதிரானது தானே? ஒரு தேர்தலின் அல்லது ஒரு மாநிலத்தின் முடிவை வைத்து எதையும் உறுதியாக கூறிவிட முடியாது. எனவே, பொதுத் தேர்தல்ளில் ஜெயிக்க வேண்டும் என்றால், 29 மாநிலங்களுக்கு 29 யுக்திகள் தேவைப்படுகிறது.' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!