டெல்லியில் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

Kanimozhi

இந்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.

பின்னர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"கடந்த ஆறு நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்கத் தயாராக இல்லை.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும். தேர்தல் நடக்கும் மாநிலத்தில்தான் மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்களின் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!