Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Yogi adityanath

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் கடந்த சில வாரத்துக்கு முன் வெளியானது. இதில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மணிப்பூர், கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு பா.ஜ.க-வைவிட காங்கிரஸ் ஒரு சில இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தபோதும், பா.ஜ.க. பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. உத்தரகாண்டில் பா.ஜ.க. அரசு நேற்று பொறுப்பேற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல், கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் ஷர்மா துணை முதல்வர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், அமைச்சர்களும் இதில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அத்வானி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்கள், சமாஜ்வாதியின் அகிலேஷ், முலாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close