அனைத்து அவசரத் தேவைகளுக்கும் ஒரே எண்... முன்னோடியாக செயல்படும் கேரளா!

Control room

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, மத்திய அரசு 'அவசர எண்களை' ஒருங்கிணைக்க திட்டம் ஒன்றை வகுத்தது. தற்போது, அந்தத் திட்டத்தை அமல்படுத்த முனைப்புக் காட்டுகிறது கேரள அரசு.

இதுகுறித்து கேரள போலீஸ் தரப்பு, 'இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களில் அவசர எண்களை ஒருங்கிணைக்கும் திட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படும். அதற்கான, பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்த ஒருங்கிணைந்த எண்ணை எந்த ஒரு அவசரத் தேவைக்கும் அழைக்கலாம். எந்தத் தேவைக்காக அழைப்பு விடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட துறைக்கு தகவல் கொடுக்கப்படும். பின்னர், அந்தக் குறிப்பிட்ட துறை, அவசர தேவைக்கான சேவையை வழங்கும்' என்று கூறியுள்ளது.

கேரளாவில் அமலாகப் போகும் இந்தத் திட்டத்துக்கு, 112 அவசர எண் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!