வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (19/03/2017)

கடைசி தொடர்பு:07:48 (20/03/2017)

மக்களின் ஆசியால்... தொண்டர்களின் உழைப்பால்... நெகிழும் மோடி!

narendra Modi

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இரண்டு மாநிலங்களில், கூட்டணி அமைத்து அரியணையில் ஏறியது.

இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று பதவியேற்கும் யோகி ஆதித்யநாத், கேஷவ் பிரசாத் மௌரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோருக்கு வாழ்த்துகள். உத்தரப்பிரதேசத்துக்கு சேவையாற்ற வாழ்த்துகள். இந்த புதியக் குழு, உத்தரப்பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இவர்களின் கீழ் உத்தரப்பிரதேசம் சாதனை வளர்ச்சியை எட்டும். 

எங்கள் முதன்மைக் குறிக்கோள் மற்றும் நோக்கம் என்பது வளர்ச்சி. உத்தரப்பிரதேசம் வளர்ந்தால், இந்தியாவே வளரும். நாங்கள் உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு சேவையாற்ற விரும்புகிறோம். அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க விழைகிறோம். மக்களின் ஆசியாலும், தொண்டர்களின் கடின உழைப்பாலும் பா.ஜ.க ஐந்தில் நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் மக்கள் சக்தி, புதிய இந்தியாவுக்கு வித்திடுகிறது.' என்று பதிவு செய்துள்ளார்.