டெல்லியில் கனிமொழி நடத்திய பேரணி!

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான தி.மு.க மகளிர் அணியினர், டெல்லியில் இன்று பேரணியாகச் சென்றனர். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கோரி, மண்டி ஹவுசில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாக அவர்கள் சென்றனர். 

Kanimozhi


நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா, கடந்த இருபது ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மார்ச் 2010-ல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக எம்பி கனிமொழி தலைமையிலான தி.மு.க மகளிர் அணியினர் டெல்லியில் இன்று பேரணி சென்றனர்.


பேரணியின்போது பேட்டியளித்த கனிமொழி,’ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த மசோதா இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படாதது ஏன்’ என்று கேள்வி எழுப்பினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!