இளையராஜா- எஸ்.பி.பி விவகாரம்! வெங்கைய நாயுடு அதிர்ச்சி!

'இசையமைப்பாளர் இளையராஜா - பாடகர் எஸ்.பி.பி இடையேயான காப்புரிமைப் பிரச்னை அதிர்ச்சியளிக்கிறது' என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

M Venkaiah Naidu
 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார்.  இந்தச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடுசெய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களைப் பாடி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இளையராஜாவின் நோட்டீசுக்கு முகநூலில் பதில் அளித்த எஸ்.பி.பி, ''இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்”, என்று கூறியிருந்தார்.

இளையராஜாவின் காப்புரிமை நோட்டீசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இளையராஜா பாடல்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தவே எதிர்ப்பு தெரிவித்து பாடகர் எஸ்.பி.பி.-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக  இளையராஜாவின் வழக்கறிஞர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
 

இந்நிலையில், இளையராஜா-எஸ்.பி.பி இடையேயான காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை அதிர்ச்சியளிக்கிறது. இவர்கள் இடையே ஏற்பட்டுள்ள காப்புரிமைப் பிரச்னை விரைவில் சுமூகமான முறையில் முடிவுக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!