வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (20/03/2017)

கடைசி தொடர்பு:17:59 (20/03/2017)

குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை! தேர்தல் ஆணையம் பரிந்துரை

தண்டனைபெற்ற குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் பரிந்துரைசெய்துள்ளது.

Supreme court

பா.ஜ.க-வின் அஸ்வின் உபத்யாய் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள், தண்டனைபெற்ற குற்றவாளிகளுக்கு, வாழ்நாள் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ள  தேர்தல் ஆணையம், ''குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும் என்று  பரிந்துரை செய்துள்ளது.

தற்போது, கொலைக்குற்றம் போன்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட  ஆறு ஆண்டுகள் தடை உள்ளது. இந்நிலையில், இதற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமே பரிந்துரைசெய்துள்ளது,, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.