அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு 'செக்' வைக்கும் உத்தரகாண்ட் முதல்வர்!

Trivendra Singh Rawat

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பா.ஜ.க. 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 

இந்தத் தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்தது பா.ஜ.க. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அக்கட்சியின் திரிவேந்திர சிங் ராவத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரகாண்ட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருக்கும் திரிவிந்திர சிங் ராவத் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 'எங்கள் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக பின்பற்றப்படும். உத்தரகாண்ட் அரசு, தற்போது நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள், தேவையற்ற செலவுகள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டறிவோம். புது வரவுக்குத் தேவையான வழிகளைப் பற்றி ஆலோசிப்போம். பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது, எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள், அவர்களின் சொத்து மதிப்பு பற்றி ஒவ்வொரு ஆண்டும் கணக்கு கூறும்படி முறை இருந்தது. அந்த நடைமுறை மறுபடியும் அமல்படுத்தப்படும்' என்று பேசியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!