Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபர் மசூதி பிரச்னையை, வெளியே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பாபர் மசூதி பிரச்னையை, வெளியே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Ayodhya dispute

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில், பா.ஜ.க-வின் அத்வானி உள்பட மூத்த தலைவர்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்செய்தது. இந்த வழக்கிலிருந்து கடந்த 2001-ம் ஆண்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், பாபர் மசூதி வழக்கை, அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'இந்த வழக்கு மிகவும் உணர்வுபூர்வமானது. எனவே, இதை வெளியில்வைத்து, பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு மத்தியஸ்தராக உதவ நீதிமன்றம் தயாராக உள்ளது. இதன் அடுத்தகட்ட விசாரணை 31-ம் தேதி நடைபெறும். அப்போது, அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாமா என்பதைக் கூற வேண்டும்' என்று தலைமை அமர்வு தெரிவித்தது.

இதற்கிடையே, பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதில் தீர்வு எட்டப்படவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார். ஆனால், 'இதைப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டும். அதற்கான மத்தியஸ்தரை நீதிமன்றம் நியமிக்கும்' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close