தமிழகத்துக்கு தினந்தோறும் 2,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Supreme court

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் பயிர்கள் கருகின. இதனால் வேதனை அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், தமிழகம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

இந்தநிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை ஜூலை மாதம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜூலை 11-ம் தேதி வரை, கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தினமும் 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!