வெளியிடப்பட்ட நேரம்: 23:01 (21/03/2017)

கடைசி தொடர்பு:09:33 (22/03/2017)

காவிரி நீர் திறக்க முடியாது - கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் 2,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை  ஜூலை மாதம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ஜூலை 11-ம் தேதி வரை கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தினமும் 2,000  கன அடி நீர் திறக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், "காவிரியில் எங்கள் மாநிலத்துக்கே போதிய தண்ணீர் இல்லை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட முடியாது" என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.