இந்தியாவில் ஆறு கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை #WorldWaterDay

உலக தண்ணீர் தினம் இன்று, கடைபிடிக்கப்படுகிறது.

World water day

கடந்த 1993-ம் ஆண்டு முதல், மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதுமே, பல்வேறு மாநிலங்களில் கடும் வறட்சி நிலவிவருகிறது.

 2040-ம் ஆண்டில், உலகில் 4-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் என்று யுனிசெஃப் கூறியுள்ளது. குறிப்பாக, இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில், 60 கோடி மக்களுக்கு கடும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்படும் என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.

நகரமயமாதல், அதிகரிக்கும் மக்கள் தொகை போன்றவற்றால், தெற்கு ஆசியாவில் கடும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எத்தியோப்பியா, தெற்கு சூடான், சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் 36 நாடுகளில், தீவிரமான தண்ணீர்ப் பிரச்னை நிலவிவருகிறது. முக்கியமாக, இந்தியக் கிராமப்புறங்களில் வசிக்கும் 6 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!