உத்தரப்பிரதேசத்தில் பசுக் கடத்தலுக்குத் தடை! தொடரும் முதல்வர் யோகியின் அதிரடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக் கடத்தலுக்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Yogi Adityanath

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.  அன்று முதல் அவர் தினசரி பல்வேறு, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, அவர் நியமித்த அரசு நியமனங்களை ரத்து செய்தார். மேலும், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி, ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று முதல் பசுக் கடத்தலுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஆதித்யநாத். மேலும், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, மாநிலம் முழுவதும் உள்ள பசுவதைக் கூடங்களை மூடவும் யோகி உத்தரவிட்டுள்ளார். இதற்காக, விரைந்து நடவடிக்கை எடுக்கக் கூறி போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, அங்கு சட்டவிரோதமாகச் செயல்படும் மாட்டிறைச்சிக் கடைகளை, மூடவும்  அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் அம்மாநில சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. அங்கு பல மாட்டிறைச்சிக் கடைகள், நீண்ட காலமாக புதுக்கப்படாமல் இருக்கும் கடைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!