'மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்' - மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இதன் காரணமாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

Mumbai high court

இதுதொடர்பான வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மருத்துவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசுக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தக்கூடாது' என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சற்று நேரத்தில், அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெசிடெண்ட்  மருத்துவர்கள் நடத்தி வரும் விடுப்பு போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!