’நவீனத் தமிழின் மேதைகளில் ஒருவர் அசோகமித்திரன்’ : ஜெயமோகன் புகழ் அஞ்சலி! | Tamil writer Ashokamitran laid to rest at Besant Nagar

வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (24/03/2017)

கடைசி தொடர்பு:14:52 (24/03/2017)

’நவீனத் தமிழின் மேதைகளில் ஒருவர் அசோகமித்திரன்’ : ஜெயமோகன் புகழ் அஞ்சலி!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன், உடல்நலக்குறைவால் நேற்றிரவு, சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 85.

இன்று காலை 9 மணிக்கு அவரது வீட்டில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 11 மணியளவில் பெசன்ட் நகரில், உடல் தகனம் செய்யப்படுகிறது.

ashokamitran 
 

அசோகமித்திரன் மறைவு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், ’நவீனத் தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை’ என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

’திரு. அசோகமித்ரனின்  எழுத்து, அவர் காலமும் கடந்து வாழும்.  அவரை வாசித்து, நேசித்து, சந்தித்த பெருமைபெற்றவன் நான். நன்றி! அமரர் அனந்துவிற்கு’ என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் புகழ் அஞ்சலி சூட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க