உலகின் 25% காச நோயாளிகள் இந்தியாவில்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகில் உள்ள காசநோயாளிகளில் 25% பேர் இந்தியாவில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

TB India
 

காசநோய் (TB) மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கான சர்வதேசப் பத்திரிகையில் வெளியாகியுள்ள அறிவியல் ஆராய்ச்சி முடிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் மையம் நடத்திய இந்த ஆய்வில், இந்தியாவின் காசநோயாளிகள் மட்டுமன்றி அண்டை நாடுகளில் காசநோயின் தாக்கம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்தியாவில் நகரப் பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் 12 பேர் விகிதமும், கிராமப்புறப் பகுதிகளில் வருடத்துக்கு நான்கு பேர் விகிதத்தில் காசநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆய்வின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 4,80,000 இந்தியர்கள் காசநோய் பாதிப்பினால் இறக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று ‘உலக காசநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படும் வேளையில் இந்த அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!