குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்: மூன்று ஆண்டுகளில் 4,202 புகார்கள்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த புகார் பதிவுகளின் தகவல்கள் இன்று மக்களவையில் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை ’குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்’ (NCPCR) பதிவு செய்யும். அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4,202 வன்முறைப் புகார்களில் 1,237 குழந்தைகளின் துன்புறுத்தல்கள் குறித்தவை. 397 பாலியல் துன்புறுத்தல் புகார்கள், 94 குழந்தைத் தொழிலாளர்கள் புகார்கள், 16 குழந்தை கடத்தல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015-16, 2014-15, 2013-14 என ஒவ்வொரு ஆண்டும் முறையே 215, 304, 211 வன்முறைப் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்த புள்ளிவிவரத் தகவல்களை ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு’ அமைச்சர் மேனகா காந்தி இன்று மக்களவையில் வெளியிட்டுப் பேசினார். இதில் 2016-2017 காலகட்டத்தில் மட்டும் 507 குழந்தைகள் துன்புறுத்தல் புகார்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!