வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (24/03/2017)

கடைசி தொடர்பு:21:23 (24/03/2017)

உ.பி முதல்வர் உத்தரவின் எதிரொலி... விலங்கியல் பூங்காவில் உணவில்லாமல் தவிக்கும் மிருகங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர் பா.ஜ.க தலைமையிலான அரசு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் 15 நாள்களுக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும், ராமாயண அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு, அனுமதியின்று செயல்பட்டு வரும் இறைச்சி வெட்டும் ஆலைகள் மூடல் என்று பல அதிரடி அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. 

இதில் குறிப்பாக, இறைச்சி வெட்டும் ஆலைகளின் மூடல் உத்தரவால் உயிரியல் பூங்காக்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கான்பூர் உயிரியில் பூங்காவில் மட்டும் 70 மிருகங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் மிருகங்களுக்குப் போதுமான அளவு இறைச்சி இல்லாததால், அவற்றை ஒரு தற்காலிக டயட்டில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த நான்கு பூங்காக்களும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.