சாதனைக்குத் தயாராகும் யோகா கிராமம்

கேரளாவின் குன்னம்தானம் கிராமத்தினர் இந்தியாவின் ‘முதல் யோகா கிராமம்’ என்ற சாதனையை எட்டவுள்ளனர். அக்கிராமத்துப் பஞ்சாயத்து தலைவரின் கிராம வளர்ச்சி திட்டத்தால் இந்த அங்கீகாரத்தை குன்னம்தானம் கிராமம் பெறவிருக்கிறது.

yoga

கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான குன்னம்தானம் வருகிற உலக யோகா தினத்தன்று ‘முதல் யோகா கிராமம்’ என்ற தேசிய சாதனையை நிகழ்த்தவுள்ளது. குன்னம்தானம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கே.கே. ராதாகிருஷ்ண குருப். கிராம வளர்ச்சி திட்டங்களுக்காகப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டுவரும் இவர், சமீபத்தில் ‘எனது கிராமம், ஆரோக்கியமான கிராமம்’ என்ற புதிய வளர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் கிராம மக்கள் அனைவருக்கும் கிராம பொது இடங்களில் யோகா பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

வருகிற மே 31ம் தேதியுடன் இப்பயிற்சி நிறைவடைவதால் ‘உலக யோகா தினமான ஜூன் 21ம் தேதியன்று ஒட்டுமொத்த கிராம மக்களும் இணைந்து மிகப்பெரிய யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் மூலம் ‘முதல் யோகா கிராமம்’ என்ற சாதனையை குன்னம்தானம் நிகழ்த்தவிருக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!