உலகின் மிக உயர்ந்த சிலையாகும் வீர சிவாஜி நினைவு சிலை | Veer Shivaji Memorial Statue will become the World's Tallest statue

வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (25/03/2017)

கடைசி தொடர்பு:20:08 (25/03/2017)

உலகின் மிக உயர்ந்த சிலையாகும் வீர சிவாஜி நினைவு சிலை

மஹாரஷ்டிரா மாநிலத்தில் அரபிக்கடல் கரையில் அமையவிருக்கும் வீர சிவாஜி நினைவுச்சிலை தற்போது உலகின் மிக உயர்ந்த சிலையாக உருவெடுக்கவுள்ளது. உலகின் உயர்ந்த சீனாவின் புத்தர் சிலைக்குப் போட்டியாக வரும் வீர சிவாஜி நினைவிடத்தின் திட்டமதிப்பு 3,600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக சீனாவின் புத்தர் சிலை விளங்குகிறது. 208மீ உயரமுள்ள இந்தச் சிலையின் சாதனையை முறியடிப்பதற்காகவே இந்தியாவில் வீர சிவாஜி நினைவுச்சிலை கட்டப்படவிருக்கிறது. 2016ம் ஆண்டின் இறுதியில் 192மீ சிலையாகக் கட்டப்படும் என்ற திட்டத்துடன் அடிக்கல் நாட்டப்பட்டது தற்போது 210 மீட்டராக உயர்த்தப்பட திட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்து நினைவுச்சிலை திறக்கப்பட்டால் உலகின் மிக உயர்ந்த சிலையாக வீர சிவாஜி நினைவிடம் திகழும். 3,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முதற்கட்ட பணிக்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெலிபேட், ஐமேக்ஸ் தியேட்டர் என அமையவிருக்கும் இந்த நினைவகத்தில் பார்வையாளார்கள் 60ம் மாடி வரை அழைத்துச்செல்லப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.