ஓபியத்துக்கு அடிமையாகும் கிளிகள்!

மத்தியப்பிரதேசத்தில் 'கசகசா' பயிரிட்ட விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர். பாப்பிச் செடியில் இருந்து கசகசா எடுக்கப்படும். அதேபோல், மருத்துவ பலன்களுக்காகவும், பாப்பி பயிரிடப்படுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்த பாப்பியில் இருந்து ஓபியம் என்ற போதைப் பொருள் எடுக்கப்படுகிறது.

Poppy Opium Parrots

பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில், இந்த பாப்பி பயிரிடப்பட்ட, நிலங்களில், காட்டுக்கிளிகள் அட்டகாசம் செய்கின்றன. விவசாயிகள், நிலத்தை விட்டு செல்லும் வரை பொறுமையாக மரத்தில் இருந்து, அவர்கள் சென்ற உடன், தங்களது வேலையைக் காட்டுகின்றன இந்த கிளிகள். குறிப்பாக, கிளிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. ஓபியத்துக்கு பயங்கர அடிமைகளாகி வருகின்றன இந்தக் கிளிகள். இவற்றை விரட்ட, பட்டாசு வைப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் எடுத்து விட்டனர். 

ஆனால், கிளிகள் இந்த பாப்பி செடிக்கு படையெடுப்பதை நிறுத்துவதில்லை. இதனால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!