வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (26/03/2017)

கடைசி தொடர்பு:10:45 (26/03/2017)

போலீஸிடம் துப்பாக்கியை பறித்த தீவிரவாதிகள்!

ஜம்முவில் போலீஸின், துப்பாக்கியை தீவிரவாதிகள் பறித்து சென்றனர்.

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் ஒருவரை தாக்கிவிட்டு, தீவிரவாதிகள் இரண்டு பேர் ஏ.கே - 47 ரக துப்பாக்கியை பறித்து சென்றனர். இதில் அந்த போலீஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, துப்பாக்கியை பறித்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு தீவிரவாதி, துப்பாக்கியுடன் தப்பியோடி விட்டார். இதைத்தொடர்ந்து, மற்றொரு தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தப்பியோடிய தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளார்

காயமடைந்த போலீஸ்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவர்கள் பறித்து சென்ற துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஶ்ரீநகரில் டி.எஸ்.பி ஒருவரின் வாகனத்துக்கு, தீவிரவாதிகள் தீ வைத்துள்ளனர்.