வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (26/03/2017)

கடைசி தொடர்பு:12:06 (26/03/2017)

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு வைகோ ஆதரவு!

Vaiko Meets Farmers in Delhi

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில், 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர். இதற்கிடையே நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷால், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து நேற்று போராட்டக்களத்தில், இரண்டு விவசாயிகள் மரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். பின், நடிகர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கினர். 

இந்நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று டெல்லி, சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.