வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (26/03/2017)

கடைசி தொடர்பு:09:45 (27/03/2017)

'ஜெட்லி தரப்பினர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்!' ஆம் ஆத்மி கட்சியினர் குற்றச்சாட்டு

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் சிலர் மீது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். வரும் மே மாதம் 20-ம் தேதி முதல், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெல்லியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்று நேற்று அறிவித்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தரப்பு, 'நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே, ஜெட்லியின் சட்டக் குழுவில் இருந்த ஒருவர் எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக, நாங்கள் வழக்கு பதிவுசெய்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து பா.ஜ.க-வின் உறுப்பினர் மகேஷ் கிர்ரி, 'ஆம் ஆத்மி கட்சியினர் கனவு உலகத்தில் வாழ்கின்றனர். பொது வாழ்க்கையில் மிகவும் வெளிப்படையாக இருக்கும் ஒரு நபர் மீது, அவதூறாகப் பேசும் முன்பு அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.