தொடரும் விவசாயிகள் தற்கொலை! மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி

supreme court

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க, நான்கு வாரத்துக்குள் செயல்திட்டங்களுடன் விளக்கமான பதில் அளிக்க, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துவருகிறது.  தமிழக விவசாயிகள், கடந்த 14 நாள்களாக தலை நகர் டெல்லியில் போராட்டம்  நடத்திவருகின்றனர். முன்னதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தில், விவசாயிகள் பிரச்னை குறித்து தமிழக விவசாயிகள் மனு அளித்தனர்.

டெல்லியில், தமிழக விவசாயிகளின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், விவசாயிகளின்  தற்கொலையைத் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விவசாயிகள் தற்கொலை என்பது, நாட்டின் முக்கியமான பிரச்னை. நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு தர வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க, இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நான்கு வாரத்துக்குள் செயல்திட்டங்களுடன் மத்திய அரசு விளக்கமான பதில் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!