வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (27/03/2017)

கடைசி தொடர்பு:15:28 (27/03/2017)

வங்கிக் கணக்குக்கு ஆதார் முக்கியம்; ஆனால், உச்சநீதிமன்றம் அதிரடி!

supreme court

'அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ள, ஆதார் எண் வேண்டும் என பொதுமக்களை அரசு வற்புறுத்தக்கூடாது' என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதே நேரத்தில், 'வங்கிக் கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என்ற அரசின் முடிவுக்குத்  தடை சொல்ல முடியாது' என்றும் தெரிவித்துள்ளது.

புதிய சிம் கார்டு பெறுவதற்கும், தொலைபேசி இணைப்புப் பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் பொது விநியோகத் திட்டம் மற்றும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்துக்கும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல்செய்ய, பான் கார்டு உடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு மட்டும் ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.