2020-ல் இந்தியாவில் இன்டர்நெட் பயனர்களின் எண்ணிக்கை 73 கோடியாக உயரும்!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வேகம் எடுத்துள்ள நிலையில்... இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்பியல்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ராஜ்யா சபாவில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 'ட்ராய் இடமிருந்து வந்த தகவலின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 39 கோடி பேர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான தொலைத்தொடர்புக் கொள்கை-2012, வரும் 2020-ம் ஆண்டுக்குள் 2 எம்பி வேகத்தில் 60 கோடி பேர் ப்ராட்பேண்டு இணைப்பைப் பயன்படுத்துவர் என்று கருதுகிறது.

மேலும், 'இந்தியாவில் இன்டர்நெட்டின் எதிர்காலம்' என்ற தலைப்பிட்ட அறிக்கையில், வரும் 2020-ம் ஆண்டுக்குள் 73 கோடி பேர் இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்று நாஸ்காம் கூறுகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!