'ஜம்மூ-காஷ்மீரில், சிறுபான்மையினர் நலனுக்காக ஏன் கமிஷன் இல்லை...' - உச்ச நீதிமன்றம் கேள்வி

ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில், 'சிறுபான்மையினர் நலனுக்காக எந்தவித கமிஷனும் அமைக்கப்படாததால், அவர்களின் நலன் பாதிக்கப்படுகின்றது' என்று அன்குர் ஷர்மா என்றவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்தது உச்ச நீதிமன்றம். 

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு, 'மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும் சிறுபான்மையினர் நலனைக் காப்பதற்கு ஏன் ஒரு கமிஷனை இது வரை அமைக்கவில்லை?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.

 மேலும், 'ஒரு பகுதியில் இருக்கும் சிறுபான்மையினர் நலனை, அரசைத் தவிர யாரால் காத்திட முடியும்? இன்னும் நான்கு வாரங்களுக்குள் மத்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுகள் இதைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளது.

இதற்கு, மத்திய மற்றும் ஜம்மூ-காஷ்மீர் மாநிலங்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதிலளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!