ஜி.கே.வாசன் தலைமையில் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கும் விவசாயிகள்!

g.k.vasan

விவசாயப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, இன்று  மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம் வழங்குதல், விவசாயகள் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்துவருகின்றன. மேலும், பிற மாநில விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். இந்நிலையில்,டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த  ஜி.கே.வாசன்,செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ' விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அநீதி இழைக்ககூடாது' என்றார்.

அரசுகள், விவசாயிகளுக்குத் துணை நிற்க வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் இறந்துபோன விவசாயிகள் கணக்கெடுப்பு, சரியாக நடைபெறவில்லை என்று குற்றம்  சாட்டினார். தமிழக விவசாயிகளின் போராட்டத்தால், இந்திய விவசாயிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது. விவசாயப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, இன்று மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!