வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (28/03/2017)

கடைசி தொடர்பு:15:15 (28/03/2017)

உ.பி-யைத் தொடர்ந்து ஜார்கண்ட்டிலும் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை!

முறையான அனுமதியில்லாமல் இயங்கும் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதித்துள்ளது, ஜார்கண்ட் அரசு. 72 மணி  நேரத்துக்குள், அங்கீகாரம் இல்லாத கூடங்கள் மூடப்பட வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

cows

சில நாள்களுக்கு முன்னர், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், அனுமதியில்லாத இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது, பா.ஜ.க ஆளும் மற்றுமொரு மாநிலமான ஜார்கண்ட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள், ஜார்கண்டில் உள்ள அனுமதியில்லா இறைச்சிக் கூடங்கள் மூடப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளுக்கு அங்கீகாரம் இல்லையென்றால், விரைவில் வாங்க வேண்டுமெனவும், மாட்டிறைச்சி விற்பது சட்டப்படி குற்றம் எனவும், அந்தக் கூடங்கள் மூடப்பட வேண்டும் எனவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

மக்களின் சுகாதாரம் பேணுவதற்கான முயற்சியே, இந்தத் தடை உத்தரவு என ஜார்கண்ட் மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.