சிவசேனா எம்.பி.க்கு எதிராக தொடரும் அதிரடி நடவடிக்கை

Ravindra Kaikwat

மகாராஷ்டிரா சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட் சில நாள்களுக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது, விமான நிலைய ஊழியருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கெய்க்வாட், அந்த ஊழியரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏர் இந்தியா உள்பட ஏழு நிறுவனங்கள் ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணிக்கத் தடை விதித்திருந்தது.

இதையடுத்து,  கெய்க்வாட் அலுவல் ரீதியான பயணங்களை விமானத்தில் மேற்கொள்ளவில்லையெனில், நேரம் விரயமாகும் என சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் பேசினர். குறிப்பாக, எம்.பி ஒருவரை விமானத்தில் பயணிக்க தடை விதிக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரமில்லை என சிவசேனா எம்.பிக்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.

மேலும், இதுகுறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடமும் மனு அளித்தனர். இந்நிலையில் மும்பையிலிருந்து டெல்லி செல்ல ஏர் இந்தியா விமானத்தில், கெய்க்வாட் பதிவு செய்த பயணச்சீட்டை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது. மேலும், சிவசேனா எம்.பி மீது காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!