மத்திய வேளாண் அமைச்சருடன், தமிழக விவசாயிகள் சந்திப்பு!

மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங்கை, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் சந்தித்தனர்.

RadhaMohanSingh

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இன்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, திருச்சி சிவா தலைமையில் விவசாயிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்தனர். அப்போது, விவசாய கடன் தள்ளுபடி செய்ய ஜெட்லியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தனர். 

இந்நிலையில், தமிழக விவசாயிகள், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராஜா மோகன் சிங்கை சந்தித்தனர். தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, விவசாயிகளை அழைத்துச் சென்றார். அவர்களிடம், அமைச்சர் ராஜா மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!