வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (28/03/2017)

கடைசி தொடர்பு:12:45 (29/03/2017)

ஜம்மு- காஷ்மீரில் 43 ராணுவ வீரர்கள் காயம்!

ஜம்மு-காஷ்மீர், புட்கம் மாவட்டத்தின் சதுரா என்ற பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல்கள் வந்தது. இதையடுத்து, இன்று காலை முதல் அங்கு பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி சஞ்சை குமார் கூறுகையில், 'இன்றைய நாள் எங்களுக்கு மிகவும் கடினமான நாள். நாங்கள், தீவிரவாதிகள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் என இரு தரப்பினரையும் சமாளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது கற்கள் வீசப்பட்டன. இதில், 43 வீரர்கள் மற்றும் 20 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு, பாகிஸ்தான்தான் முழுப் பொறுப்பு. பிரிவினைவாதத் தலைவர்களையும் மக்களையும் பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது' என்றார்.

இதைத் தொடர்ந்து, புட்கமில் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் உள்பட அனைத்துப் போக்குவரத்துகளும் நாளை வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.